பெயர்: L.குமார்
வி.எண்:1211022
வி.எண்:1211022
24/11/2012 அன்று சிவகுரு அவர்கள் எனக்கு நாடி பிடித்து பார்த்தார்கள். அன்று எனக்கு தொக்கம் எடுக்க சொன்னார்கள். மறுதினம் 25/11/2012 அன்று எனக்கு சிவகுரு அவர்களின் ஆசிர்வாதத்தால் எனக்கு வாசியோகப் பயிற்சி அளிக்கப்பட்டது. வாசியோகப் பயிற்சி செய்த மூன்று மாதத்திற்குள் எனக்கு உடம்பு லேசாக இருப்பதை உணர்ந்தேன். நான் மந்திரம் சொல்லும் போது விரல்களை நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தும் போது பின்னந்தலையில் வலி ஏற்ப்படுவதை உணர்ந்தேன்.
எனக்கு அடிக்கடி மனக்குழப்பம் ஏற்படும். தெய்வத்தின் அருளாலும் சிவகுருவின் ஆசிர்வாதத்தாலும் மந்திரம் சொல்ல சொல்ல மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறந்தது. நன்றாக இரவில் தூக்கம் வந்தது.
நான் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று சில வருடங்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தொழில் தொடங்க முடியவில்லை. சிவகுரு அவர்களின் மந்திரத்தின் மகிமையால் இங்கு வந்த மூன்று மாதத்திற்குள் ஒரு நல்ல முடிவு ஏற்ப்பட்டது.
0 comments:
Post a Comment