சிவசித்தன் வாசியது மெய்யுடலுண்மையே
மெய்யுடலது மின்னுமே பொன்னாயே
பொன்னதுவாகுமே நின் பிண்டமே
சிவசித்தன் வானதுவே வாசியின் தேகமே...
மெய்யுடலது மின்னுமே பொன்னாயே
பொன்னதுவாகுமே நின் பிண்டமே
சிவசித்தன் வானதுவே வாசியின் தேகமே...
சிவசித்தன் வாசியது வான் காட்டுமே
உண்மை யதுவாகுமே நின்தேகமே
எங்கும்காணா நீகண்ட உண்மையதுவே
சிவசித்தன் உண்மையது வாசியின் தேகமே...
உண்மை யதுவாகுமே நின்தேகமே
எங்கும்காணா நீகண்ட உண்மையதுவே
சிவசித்தன் உண்மையது வாசியின் தேகமே...
சிவசித்தன் வாசியது தேகமுணர்த்துமே
நின்னுடலது கழிவு நீக்கியே
நின்அகமறியும் அவ்வுண்மை அதுஅறிந்தே
சிவசித்தன் அனைத்தும்காண் வாசியின் தேகத்தில்...
நின்னுடலது கழிவு நீக்கியே
நின்அகமறியும் அவ்வுண்மை அதுஅறிந்தே
சிவசித்தன் அனைத்தும்காண் வாசியின் தேகத்தில்...
சிவசித்தன் வாசியது தேக தவமே
உடல்காணும் எண்ணத்தின் படைப்பே
படைத்தவ னங்கு காண்பாயே எண்ணமாயே
சிவசித்தன் அகமறிவாய் வாசியின் தேகத்தில்...
உடல்காணும் எண்ணத்தின் படைப்பே
படைத்தவ னங்கு காண்பாயே எண்ணமாயே
சிவசித்தன் அகமறிவாய் வாசியின் தேகத்தில்...
சிவசித்தன் வாசியது உணர்த்துமே
தேகமத்தின் உண்மையே காண்பாயே
கண்டதெல்லாம் நின்தொண்டில் கூறிடு
சிவசித்தன் அருளிய வாசியின் தேகத்தில்...
தேகமத்தின் உண்மையே காண்பாயே
கண்டதெல்லாம் நின்தொண்டில் கூறிடு
சிவசித்தன் அருளிய வாசியின் தேகத்தில்...
சிவசித்தன் ஆற்றல் அருளியே
உன்ஆற்றல் இயற்கை அறிவிக்கவே
அதுநீ செய்த வாசிஎனும் தேக தவமே
சிவசித்தன் அருளிய வாசியின் தேகத்தில்...
உன்ஆற்றல் இயற்கை அறிவிக்கவே
அதுநீ செய்த வாசிஎனும் தேக தவமே
சிவசித்தன் அருளிய வாசியின் தேகத்தில்...
0 comments:
Post a Comment