மனம்- உண்மை வாசியால் நிலைபெற்று பேறு பெறும்
இன்றைய மனிதனுடைய வாழ்கையில் அவதாரமும் எதையும் சிந்திக்காமல் செயல்படக்கூடிய தன்மையும் தான் நிறைய இருக்கிறது. ஒருவரை ஒருவர் அனுசரிக்கும் நிலையும் இல்லை ஒருவன் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது எதிரே ஒருவன் வாகனத்தில் வரும்பொழுது எதிர்பாராமல் லேசாக மோதிவிடுகிறான் இருவர்மேலும் தவறு இருக்கும் அதை ஒத்துக்கொள்ளது இருவருமே நேரத்தை வீணடித்து சண்டைப்போட்டுக் கொள்வார்கள்.
நேரம் கடந்து கொண்டே இருக்கும் பிறகு யாராவது சமாதானப்படுத்தி அனுப்புவார்கள். இதை முதலிலேயே இருவரும் உணர்ந்து சென்றிருக்கலாம் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லை நாள் முழுவதும் அதைப் பற்றியே பேசி கோபப்பட்டு கொண்டிருப்பான். இதுமட்டுமில்லாது பலவிசயங்களிலும் இப்படித்தான் இருக்கிறார்கள். பெண்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். வாசல்தெளிப்பது குழாயில் தண்ணீர்பிடிப்பது என்று அக்கம்பக்கத்தில் வீண்சண்டையிடுவார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மனதில் அசுரகுணம் மேலோங்கி இருப்பதே ஆகும்.
உண்மை என்ற வார்த்தைக்கே பலருக்கு அர்த்தம் தெரியவில்லை. இப்படி மனித இனம் இருப்பதற்கு என்ன காரணம் உண்ணும் உணவுகளைச் சொல்லலாம். அவர்கள் வளர்ந்த சூழ்நிலையும் கூறலாம் அசைவ உணவுகள் அதிக அளவில் மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். வெளியில் கண்ணில் பட்ட பலகாரங்கள் எல்லாம்சாப்பிடுகிறார்கள். இதனால் உடம்பில் பலவித நோய்கள் குடியேறிவிடுகிறது.
0 comments:
Post a Comment