Tuesday, 16 December 2014

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___34


சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
**********************************************************************
சிவகுரு சிவசித்தனின் சேவையாளர்களில் பாகுபாடு என்பது என்ன?
*********************************************************************
சிவசித்தனின் சேவையாளர்களுள் யாருக்கு எந்த பணி சரியாய் செய்ய முடியும் என்று சிவசித்தன் அறிவார். அவர்களுக்கு கொடுக்கப்பட்டதை சரியாய் செய்வதே அவரவர் கடமை. பாகுபாடு என்பது பணியைப் பொறுத்தே அன்றி மனிதருள் ஆன்மாக்களுள் என்றும் சிவசித்தனுக்கு கிடையாது.. எப்பணி எவ்விடத்தில் நடைபெற்றால் நன்மையோ அவ்விடத்தில் தான் நடக்க வேண்டும்? (சிவசித்தன் அறையில்/அறைக்கு வெளியே)நாம் மட்டும் சிவசித்தன் அருகில் இல்லை, அருகில் இருப்பவர் பாக்கியம் செய்தவர் என்றெல்லாம் எண்ணம் வேண்டாம். உன் உடலில் உள்ள வலியை நீ வேறு இடத்தில இருக்கும் போது நீக்கும் சிவசித்தனை, உன்னுள் உணரும் உன்னால் ஏன் நீ சேவை செய்யும் போதும் அவர் உன்னுளே இருக்கிறார் என்று ஏற்க முடியவில்லை.அப்படியென்றால் நீ மனிதனைதான் பார்க்கின்றாய், உணர்வை பார்க்கவில்லை.உன்னுடலில் இன்னும் கழிவு உள்ளது என்றே அர்த்தம்.

**********************************************************************




https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam 

0 comments:

Post a Comment