ஆண்கள் மந்திரம் சொல்வதில்லை சொன்னால் எதிர்பார்த்தபலன் கிடைக்குமா? என்று எண்ணுகிறார்கள்…வாசியோக குருகுலத்தில் ஆண் பயிற்சியாளர்கள் + பெண் பயிற்சியாளர்கள் இருபாலரும் உடல் நலம் பெற உண்மை அறிய ஆர்வத்துடன் வாசியோகம் அனுதினமும் குருகுலத்தில் வந்து பயிற்சி செய்கிறார்கள். வாசியில் கவனம் செலுத்தி சுவாசத்தை நன்றாக உணர்த்தி செய்து விட்டால் போதும் உடல் ஆரோக்கியம் முழு நிறைவடையும். ஆனால் இன்றளவும் ஒரு சில பயிற்சியாளர்கள் விதிமுறைகளை கடைபிடிப்பதில் நிறைய தவறுகள் செய்கிறார்கள்.
வாசியோக குருகுலத்திற்கு வந்து எனக்கு சீக்கிரமே குணமாக வேண்டும் என்று எண்ணினால் மட்டும் போதாது நம் செயலிலும் அந்த எண்ணம் வெளிப்படவேண்டும். சின்னவெங்காயம் காலையில் பயிற்சி முடிந்தவுடன் கறிவேப்பில்லை & புதினாமல்லி சாப்பிட்டு 10 நிமிடம் கழித்து 5 வெங்காயம் கட்டாயம் சாப்பிட வேண்டும். மதியம் 10 சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ளவேண்டும். நிறைய அன்பர்கள் காலையில் சாப்பிடுவதேயில்லை மதியம் கூட அளவு கம்மியாக சாப்பிடுகிறார்கள். வாசியோகம் செய்பவர்கள் சின்னவெங்காயம் கட்டாயம் சாப்பிடவேண்டும் என்று சிவகுரு கூறியுள்ளார்கள்,என்றால் அதை நாம் உண்மையாக கடைபிடித்தால் வாசியின் செயல்பாட்டை விரைவாக உணரலாம்.
இதுமட்டுமல்லாது சிவகுருவின் வார்த்தை எதுவாயினும் ஏற்று நடக்க வேண்டும். பயிற்சிக்கு முன் ஒவ்வொருவரின் நோயால் பிரச்சனைகள் அதிகஅளவில் துன்பப்பட்டிருப்பர்கள். இன்று வாசியோக குருகுலத்தில் வாசியோகம் செய்து நன்மைபெற்று வாழ்கிறார்கள். கடந்த வந்த பாதையை நினைத்து நம்மை சீர் செய்யும் சிவகுருவின் அனைத்துக் கட்டளைகளை ஏற்று நாம் நடக்க வேண்டும்.
0 comments:
Post a Comment