Saturday, 6 December 2014

வாசியோக பயிற்சி மாற்றவில்லை, என்று எண்ணுகிறார்கள் …

316
பயிற்சி மாற்றவில்லை என்று எண்ணுகிறார்கள் உரிய நேரத்தில் சிவகுருவால் மாற்றப்படும்.
     உலகெங்கிலும் பலதரப்பட்ட மையங்கள்(யோகா) செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பயிற்சிகள் மட்டும் சொல்வார்கள். அனைவரும் ஒரே மாதிரி அந்த பயிற்சிகளை செய்வார்கள். அனைவருக்கும் அது ஒத்துப்போகுமா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்னெனில் ஒருவரின் உடல்கூறு அறியாமல் தரப்படும் பயிற்சி எப்படி பலனளிக்கும்? இது மட்டுமல்ல, மருத்துவம் பார்பவர்கள் அதையும் பயிற்சியையும் சேர்த்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
மருந்து மாத்திரை என்பதே கழிவு! என்பது சிவகுருவின் கூற்று, உள்ளே விசத்தை போட்டுக்கொண்டே எந்த ஒரு உடற்பயிற்சி, சுவாசப்பயிற்சி, செய்தால்  உடல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. உணவுக்கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதில்லை, எனக்கு தெரிந்து சில நண்பர்கள் உறவினர்கள் ஏதேதோ பயிற்சி செய்கிறார்கள். இதன்விளைவு மருந்து மாத்திரை அதிகமாக சாப்பிடுகிறார்கள். இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இயங்கிவருகிறது. மதுரை சிந்தாமணியில் உள்ள ஸ்ரீ வில்வம்யோகமயமான வாசியோக குருகுலம் இதை மிகசிறப்பாக நடத்தி வருகிறார்கள் சிவகுருசிவசித்தர்.


0 comments:

Post a Comment