Saturday, 29 November 2014

ஆதியான_சிவகுரு_சிவசித்த_சங்கரனே - 6

ஏழும் கண்ட ஏற்றமவன்
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
********************************************************












சிவகுரு சிவசித்த பேரொளியவன்
அருவுருவாய் ஒளிவடிவாய் வாசிஎனுந்
தேகதவம் அளித்தே அனைவருள்ளும்
அருள் நிரப்ப அருவியாய் உள்ளமும்
உயிர் நிலையும் அனைவரும் நலமாய்
இருக்க எண்ணியே சிவசித்தன்
அருள் வேண்ட வாய்பளித்தே அருள்
அளித்தானே அக்கினித்தம்பனே
அருளவன் அபிநயம் அறியாக்
கழிவுடம்பே அருள்கூட்டும் செயல்
திருத்தாதே எதனையுமே காண்பாயே
சிவசித்தன் அருளும் உண்மையிதுவே
அருளது வேண்டின் கடைபிடி சிவசித்த
நெறியே அன்றில்நின் அர்த்தமும் நாசமாகும் இக்கணமே.
********************************************************

0 comments:

Post a Comment