Saturday, 1 November 2014

‎வாசியோகத்தின்_உண்மைப்பொருள்

‪#மனிதனே வாசியோகத்தை பழகிப்பார். உண்மை அறிவை அறிவாய். வாசியோகம் தான் உலகில் இறைவன் ஒருவன் இருக்கிறானா, அதன் செயல் என்ன என்பதையும் , உடல் உணர்வால் உணர்ந்து செயல்படும் விதத்தை உணர்த்தும் உன்னத கலையே வாசியோகம்.

‪#அனைத்து உயிர்களிலும் இறைவன், உண்மை உணர்வாய் இருக்கிறான் என்பதை மறவாதே. உண்மையாக நீ இருந்தால் தான் உன் உடலே உண்மையாகும். உண்மை என்பதை நீ என்று அறிகிறாயோ , அன்று தான் அனைத்து உயிர்களிலும் இறைவன் கலந்து இருக்கிறான், என்பதை நீயே உணர்வாய். வாசியோகம் செய்து உண்மையாக நீ வாழ்ந்தால் தான் உண்மை இறை உணர்வையும் , உண்மை பேராற்றலையும் கொடுத்து உன் உயிரில் கலந்து அழிவின்றி உன் உடல் உண்மையோடு நிலைபெற்று நிற்ப்பான்.------- சிவசித்தன்

0 comments:

Post a Comment