சிவகுரு சிவசித்தரின் ஆசியால்,

அகம் காண ஆலயம் சென்றேன்.....
ஏற்றிய தீபமும் கரைந்தது.....
கூறிய மந்திரமும் உறைந்தது......
செலுத்திய தட்சணையும் பொய்த்தது......
அனுதினமும் நடந்து உடலும் சோர்ந்தது......
மறைநாதன் மறைந்திருப்பான் என எண்ணி
மலைகள் பல ஏறித் தேடினேன்.......
மயங்கலானேன் நோவுற்றது......
உற்ற நோவு தீர மீண்டும்
முதலில் இருந்து தொடங்கினேன்.......
எடுத்த பிறவியும் போதாதோ?
உண்மையின் மெய்யைக் காண என எண்ணி
மனம் துவண்ட வேளையில்.......
கூடல் மாநாகரில் விரல் தொட்டு
நரம்பில் வீணை ஏற்றி
உண்மை உயிர்ப் பொருளை
உன்னதத்தை கழிவகற்றி
உண்மை வாசி உள்ளேற்றி
அணுவின் அற்புத ஆற்றலை
வாசி வழியே உள் உணர்த்தி
மண்டிட்டுக் கிடந்த மாய சர்ப்பத்தை
மகுடியாம் சிவசித்த மந்திரஞ்சொல்லி
இரு விழி நடுவே இயக்கத்தின் முதல் சக்கரமாம்
சுழிமுனையை சூடாக்கி
அச்சூட்டின் ஒளி பிம்பமாக
#பரவொளிநாதன் தோன்றிட
பேரானந்த நிலை அடைந்தேன்.......
வெளியில் கண்ட தீபாராத ஒளியை
அகத்தே காண்கையிலே கண்கள்
சிவந்து மெய் நெருப்பாய்
#உண்மைநாதன் உள் ஒளியாய்த் தோன்றிய
எம் #சிவகுருசிவசித்தனின் திவ்ய தரிசனம் கண்டேன்.....
அலைந்து கிட்டாத ஆனந்தம்
அரை நொடியில் அனுதினமும்
வாசிப் பயிற்சி செய்கையிலே.....
பிறவியின் பேறு பெற்றேன்......
#பேரருளாளன் #சிவகுருசிவசித்தன் வாசியால்......
பொய்யில்லா மெய்யுரைத்தேன்
மெய்யாய் உள் சென்ற வாசியால்......
தஞ்சம் என அடைந்தேன்
தனித்துவமாய் தன் நிலை அறிந்தேன்.
தமிழால் எம் ஒரே #வாசித்தலைவன்
#சிவகுருசிவசித்தன் தாள் பணிந்து......
0 comments:
Post a Comment