ஆம் இன்று முதல் சிவசித்தர் உணர்த்தியது
"படைத்தவன் தன்னையே பார் ".
"படைத்தவன் தன்னையே பார் ".
பார்த்து விட்டோம் .பகிர்ந்து கொண்டோம் .
பஞ்சபூத நாயகனை.
பஞ்சபூத நாயகனை.
சிவகுருசிவசித்தரின்தாளசரணம். ***************************************************
இன்று குருவாரம்.30 / 10 .மதுரை சிந்தாமணி சிவகுரு சிவசித்தரின் வாசியோக மையத்தில் மாலை சரியாக 7 / 03 க்கு முத்திரை தியான வகுப்பினை இறை வணக்கத்துடன் தொடக்கி வைத்தார். வழக்கமான அமர்வில் அமரப் பணித்து, இரு கைகளையும் தொடையின் மீது உள்ளங்கைகள் வானத்தைப் பார்த்து வைத்த வண்ணம் இருகண்களையும் மூடியபடி வயிற்று பகுதியில் உற்று நோக்கிய அதே வேளையில் நெற்றி மையத்தையும் கவனிக்கக் கூறினார்.
அடுத்த நொடியில் ,எம்முள் உறைந்திட்ட இறை ஆற்றல் பீரிட்டு பரவியது. நெற்றி மையத்தில் சுளிமுனை இயக்கம் “சுளீர்”என்று கொப்பளித்தது. அத்துடன் பிடரியில் வலதுபக்கமாக சிறு வலியுடன் கூடிய அழுத்தம் அதிகரித்தது. அதனை லயித்த வண்ணம் அடிவயிற்றை அவதானித்த போது வயிற்றுப் பகுதியில் உள்ளார்ந்து நோக்கியதில்,காரிருள் பாதாளம் நோக்கி இழுத்து செல்வதை கண்டு மிரண்ட வண்ணம் லயித்த சற்று நேரத்தில் ,எம்முள் ஆழ்ந்து,அமிழ்ந்து போனோம்.
அவ்வப்போது ஏற்பட்ட சிலிர்ப்பில் உடலின் அதிர்வலையால் விழிப்புநிலை வந்தது. இப்படியே நேரம் சென்றதே தெரியவில்லை. அப்போது சிவகுரு சிவசித்தரின் குரல் போதும் ஓய்வெடுங்கள் என்று ஒலித்தது . .3 மணி நேரம் தூங்கி இடையில் எழும்போது ஏற்படுமே கண்ணில் ஒரு அழுத்தம் வெகு நேரம் நீடித்தது.இன்றைய நாள் இதுவரை உணராது உன்னதம் அபிரமிதமாக உணர்ந்தோம்.இருப்பினும் பின் மண்டையில் உருவான வேதனை கலந்த அழுத்தம் நீடித்த வண்ணம் உள்ளது.இன்று நள்ளிரவு 2-15 வரை நீடிக்கும் என்று கூறியுள்ளார். இதுபோன்ற புதிய ஒரு அனுபவத்துடன் மீண்டு அடுத்த குருவாரம் சந்திப்போம்.
சர்வம் சிவகுரு சிவசித்தருக்கே சமர்ப்பணம்.

0 comments:
Post a Comment