
சிவகுரு சிவசித்தரின் ஆசியால்,
புவியில் பிறந்த உயிர்களிடத்தில்
புல்லுருவியாய் ஊடுருவி....
புல்லுருவியாய் ஊடுருவி....
தீய எண்ணமாய் தன்னுள்ளேதரித்திடுமே.....
வேண்டா உணவை சிறிதே – உண்டாலும்
சீற்றத்தோடு உள்ளேறுமே.....
சீற்றத்தோடு உள்ளேறுமே.....
சிந்திக்க நேரம் தராது – சிந்தனையை
தூண்டாமல் துவளச் செய்திடுமே.....
தூண்டாமல் துவளச் செய்திடுமே.....
அனுதினமும் உருவாகும் அணுவை
அழித்தே கொன்றிடுமே.....
அழித்தே கொன்றிடுமே.....
உண்மையான உடலை உனக்கு
உணர்த்தாமல் செய்திடுமே......
உணர்த்தாமல் செய்திடுமே......
உடல் பெற்ற உயிரை
உரையச் செய்திடுமே......
உரையச் செய்திடுமே......
காலனைத் தோழனாக்கி காலத்தே
வந்தடைந்திடுமே......
வந்தடைந்திடுமே......
கருத்தை அறியாமல் கண்மூடித்
தனமாக அலைய வைத்திடுமே......
தனமாக அலைய வைத்திடுமே......
நோவு வந்து நொடியில் சேர
நுழைவாயிலாய் இருந்திடுமே.....
நுழைவாயிலாய் இருந்திடுமே.....
காயமதை காயமாக்கி நோய்
கள்ளனின் இருப்பிடமாக்கிடுமே......
கள்ளனின் இருப்பிடமாக்கிடுமே......
பல திறமை கொண்டிருந்தாலும்
பயந்தோட வைத்திடுமே......
பயந்தோட வைத்திடுமே......
என்ஜான் உடல்தனில் வஞ்சமாய்
உள் நுழைந்து உடலின் வேரான
உயிரை அழித்திடுமே.......
உள் நுழைந்து உடலின் வேரான
உயிரை அழித்திடுமே.......
இரு உடலில் ஓர் உடலில் இருந்து
மறு உடலுக்கு சென்று புது உடலிலும்
உட்புகுந்து கருவாய் உருவெடுத்திடுமே......
மறு உடலுக்கு சென்று புது உடலிலும்
உட்புகுந்து கருவாய் உருவெடுத்திடுமே......
கண் இமைக்கும் நேரத்தில்
கை காரியம் செய்ய வைத்திடுமே......
கை காரியம் செய்ய வைத்திடுமே......
நல் அன்னமாய் நீ உண்டாலும்
தீய விஷமாக அதை மாற்றிடுமே......
தீய விஷமாக அதை மாற்றிடுமே......
தன்னிலை இழக்கத் தயங்காமல்
உள்நுழையுமே......
உள்நுழையுமே......
மாய எண்ணமே உன் உடலை
மயானமாக்கிடுமே...
மயானமாக்கிடுமே...
#சிவசித்தனின் பாதம் தஞ்சமடைந்தேன்
கரிசனம் கொண்டு #வாசி
பயிற்றுவித்து பரிதவித்த என்னை
பரத்தை உணர்த்தி பரம்பொருளின்
பொருளுணர்த்தி திருவருள் தந்த
#ஆதியானசிவகுருசிவசித்தசங்கரனே!
நின் பாதம் பணிகின்றேன்.................
கரிசனம் கொண்டு #வாசி
பயிற்றுவித்து பரிதவித்த என்னை
பரத்தை உணர்த்தி பரம்பொருளின்
பொருளுணர்த்தி திருவருள் தந்த
#ஆதியானசிவகுருசிவசித்தசங்கரனே!
நின் பாதம் பணிகின்றேன்.................
0 comments:
Post a Comment