Friday, 7 November 2014

சிவகுரு சிவசித்தர் ஆசியால்

சிவகுரு சிவசித்தர் ஆசியால்
யாதுமறியா அற்பனாய்
உண்மையறியா மூடனாய்
ஊணாலே உடலை வளர்த்து
உயிர் என்னும் உன்னதம் உணரா
சராசரி மானிடனாய் இருந்த என்னை
பிறவியால் ஏற்பட்ட கழிவை அகற்றி
இடையே உணவால் உறவால் ஏற்பட்ட கழிவையும் அகற்றி
அனைத்திலும் அணுவாய்
ஆனந்த பரவொளியில் உருவாய்
இன்னமுதத் தமிழ் மொழியால்
ஈடில்லா உயிர் வாசியால்
உண்மையாய் உண்மை உணர
ஊரார் இழிசொல் அகற்றி
என்னுள்ளே எண்ணத்தின் வண்ணமாய்
ஏகாந்தன் வாழும் ஏற்புடம்பை மாற்றி
ஐயமான உடலை ஐஸ்வர்யமாக்கி
ஒப்பில்லாத ஒழுக்கநெறியால்
ஓதும் மறைபொருள் என்னுள்ளே உணர்த்தி
ஒளடத வாழ்க்கையை எனக்கு அகற்றி
அக்தே பரவொளிநாதனின் பக்தனாக
எனை நிலை ஏற்றி
என்றும் வாசியின் உண்மை மாணவனாக
இறுதிவரையில் இயைந்திருக்க
எம் சிவகுரு சிவசித்தன் தாள் பணிந்து
இந்த நாளை இனிதே பயணிக்கின்றேன்!

0 comments:

Post a Comment