ஒரு மனிதன் ஒருவரை கடவுளாக மனதில் எண்ணி வாழ்ந்துவரும் நிலையில் ,
அவன் உடல் நிலை குறைபாடு ஏற்பட்டால், அந்த மனிதன் மருத்துவமனைக்கு போக கூடாது. யாரை கடவுளாக எண்ணி வழி பட்டானோ , அவரின் கோவிலில் சென்று தன்னை குணபடுத்த, சொல்ல வேண்டும்.
உன் அகத்தில் தான் உண்மை எண்ணமான இறைவன் குடிகொண்டு இருக்கிறான்.அவனை அறியாமல் நீ செய்யும் உன் செயலால் உனக்கும் உடலுக்கும் உன் எண்ணத்தால் அழிவுதான் வரும். உன் உடலை அறி.உன் அகத்தை அறி.உன் அகத்தின் உண்மை எண்ணமே உண்மை இறைவன்.
மற்ற உயிர்களுக்கு உன் எண்ணத்தால் நீ தவறு செய்தால் நீ எண்ணும் உன் கடவுளே உன்னை காப்பாற்ற மாட்டார்.உண்மை எண்ணத்தின், உண்மை செயலே என்றும் செயலாகும்.
உண்மையான பக்தன் நீ என்றால், உண்மையாய் இறுதிவரை நீ எண்ணும் கடவுளுக்கு உண்மையாய் இரு.உன் உடலை இறைவன் படைத்தான் என்றால், அவனை வந்து நோயை தீர்த்து உன்னை காப்பாற்ற சொல்.இல்லையேல் நீ உண்மையான பக்தன் கிடையாது.------------- சிவசித்தன்
0 comments:
Post a Comment