#மனிதனே நீ தினமும் உடலில் நோய் அதாவது வியாதி இல்லாமல் ஆனந்தத்தை
அனுபவித்து வாழும் நிலையை யார் தருகிறான் என்று பார். அவனே உன் அகத்தில் உண்மை எண்ணத்தை தோற்றுவிக்க முடியும்.
#உன் உடலில் உள்ள கழிவால் , நீ எண்ணும் எண்ணத்தால் நீ எந்த மந்திரத்தை சொன்னாலும் உன் அணுக்கள் செயல் தடைபடும். அணுக்கள் செயலை அறியாமல் , உடலின் உண்மை அறியாமல் பேசுவதை நிறுத்து. அது உன்னை அறியாமலே உன்னுள்ளே உன்னை அழிக்கும்.
#உன்னுள்ளே இருக்கும் ஆன்மா எமை அறியும். உன் உடல் உண்மை அறிந்தாலே உண்மை விளங்கும்.அதை விடுத்து இல்லாத ஒன்றை நீ எண்ணினால் உன் எண்ணமே உனக்கு ஆனந்தத்தை கொடுக்கும் , உண்மை உடலை அறியாமல் நீ எதையும் அறிய முடியாது.
#உலக படைப்பின் உண்மை அறியாமல் தேவை அற்ற எண்ணத்தை நீ எண்ணுவதை நிறுத்து. உடல் உண்மை அறிந்து பேசு.உண்மையான அணுக்களின் ஆனந்தத்தை பெறாமல் , இறந்தால் மறுபிறவில் இதே நிலை தொடரும்........ என்னோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் சொல்லும் அகத்தின் உண்மை எண்ணத்தை மதிக்கப்பார். உன் ஆணவ எண்ணத்தால் நீயே அழிந்து விடாதே.------------- சிவசித்தன்
0 comments:
Post a Comment