Monday, 20 October 2014

எதுவும்_நிரந்தரமில்லை : 08

"நான் அறிவேன்" என்று சொல்லும் போது "நான் அகந்தையாய்" இருக்கிறேன், என்று சொல்லும் உன் எண்ணமே நிரந்தரமில்லாதது. உணர்ந்தவன் சொன்னால் என்னை அப்படி தான் சொல்வாய்.
என்னோடு இருக்கும் போது நீ சொன்னது வேறு 
இன்று நீ சொல்வது வேறு ...
அகத்தில் ஒன்று பேசி , புறத்தில் வேறு பேசுகிறாய், இதுவரை நீ பேசியதை யாரும் அறியவில்லை என்று எண்ணாதே .... உன் அக இறைவன் உணர்வான் .
நீ உன் உடலை பார்க்கிறாய், நான் நிரந்தரமான அக செயலின் உண்மை உயிரின் ஆன்மாவை பார்க்கிறேன் , அது அறியும் உன் எண்ணத்தையும் என் எண்ணத்தையும், இறைவன் இல்லையென்று எண்ணாதே ...
உன் எண்ணத்தை அறிந்து பார், அகசெயலின் உண்மையான எண்ணத்தின் நெருப்பை நீ உணர்வாயா... எது நிரந்தரம்....
மனம், காயம், வாக்கு, --- படித்து இருப்பாய் , உடலின் நிரந்தரமாக செயலாவதை யார் உணர்த்தி இருக்கிறான் ...

"உணர்வை என்னிடம் கண்டவன் நீ ....படைத்ததில் நிரந்தரம் எது, உன் ஒவ்வொரு எண்ணமும் என்னுள்ளே 
என்றுமே நிரந்தரம் மறவாதே" .....சிவசித்தன்

0 comments:

Post a Comment