
அதன்பின், தலையை சற்றே கவிழ்ந்த நிலையில் இருகண்கள் மூடியபடி, நாம் நெற்றியில் திருநீறு பூசும் நெற்றி மையத்தை கண்கள் மூடியபடி உற்று கவனிக்கக் கூறினார். அடுத்தநொடி இதுவரையில் உணரப்பெறாத புதுமையாக 'சுளிமுனையின்' ஆற்றல் இயக்கம் நெற்றி மையத்தில் உள்ளார்ந்த நிலையில் ஊடுருவி உள்நோக்கி அடிவயிறுவரையில் செயல்படுத்தியது.
இச்செயல் இயங்கிய வேளையில் இருகண்களில் கண்ணீராகவும் , இருநாசியிலும் நீராகவும் [சளி வடிவில் அல்ல ]தொடர்ந்து தாரை,தாரையாக வந்தவண்ணம் இருந்தது. அத்துடன் கொட்டாவியும் பலமுறை வந்தவண்ணம் இருந்தது. இந்நிலை எவ்வளவு நேரம் நீடித்தது என்பதை உணர முடியவில்லை. [அப்படியே எம்முள் ஆழ்ந்து, ஆழ்ந்து அமிழ்ந்தோம். அவ்வேளையில், சக பயிற்சியாளர்கள் பூஜைக்கு ஆயத்தம் செய்தவண்ணம் உரையாடியது ,ஏதோ,கிணற்றுக்குள் இருந்து கேட்ப்பது போல சற்று நேரம் கேட்க முடிந்தது.]
திடீரென்று , சிவசித்தரின் குரலோசை கேட்டது. போதும் ஓய்வெடுங்கள் என்று. ஆம் ஒருமணி நேரம் சென்ற சுவடே தெரியவில்லை. மீண்டும் இறைவணக்கத்துடன் இனிதே இன்றைய தியான முத்திரை நிறைவு பெற்றது. மீண்டு அடுத்த குருவாரத்தில் புதிய அனுபவங்களுடன் சந்திப்போம்.
இச்செயல் அனைத்தையும் சுக்கிலபட்ச சந்திரன் கருட பார்வையில் உற்று நோக்கி ரசித்துக் கொண்டிருந்தான்.
-சர்வம் சிவகுரு சிவசித்தருக்கு சமர்ப்பணம்.