Friday, 19 September 2014

‎சிவசித்தனேமுதலும்முடிவும்‬

‪#‎சிவசித்தனேமுதலும்முடிவும்‬
‪#‎சிவசித்தன்‬
1...உடல் உணர்வால் உண்மை அறியவைப்பேன். உன்னை அறியும்வரை வாசியோகமே உனக்கு, உண்மையை உணர்த்தும் உன்னத வழியே எம்வழி .
2...மனிதனே, நீ உன் உடல் நாற்றத்தை வெளியில் சொல்ல மறுப்பாய் . அதை நானே அறிவேன். கேவலமான உடல்கழிவால் நீ பேசுவது உண்மையில்லை .
3...மனித உலகமே நீ எண்ணிக்கொண்டு இருக்கும் உண்மை பாதை உண்மையில்லை . நீ எண்ணுவது உண்மை என்று எண்ணினால் உடல் உண்மை அறிந்துபார்.
4...வாழ்ந்தது உண்மை என்றால் உடலில் உண்மை உண்டு. உன்னை நீ உணர்ந்திருந்தால் உண்மையாய் நீ வாழ்ந்து, உண்மையை சொல்லி இருப்பாய்.
5...மனிதனே, நீ செய்யும் உண்மை செயலை சொல்.உன்னை அறியாமல் நீ கூறும் அனைத்தும் உண்மையில்லை. நீ இறக்கும் போது தெரியும் எது உண்மை என்று.
மனிதனே, நிறைய பணம் சம்பாதிக்கலாம், நல்ல பெயர் பெறலாம், உடல் உண்மைஅறிந்து வாழவில்லை என்பதை முதலில் நீ உணரவேண்டும். வாழ்,உணர்வில் உண்மையாய் .
6...மனிதனே,நீ சொல்லும் இறைவனை இதுவரை அகத்தில் உணரவில்லை. உன்னை உணராதபோது எதுவும் உண்மையில்லை. காலம் கடக்கிறது .உடல்ஆற்றல் குறைகிறது.உண்மை எங்கே?
மனிதனே, காலம் சென்றால் காட்சி மாறாது ..
7...காணும் இயற்கை மாறாது. உன் உடல்உண்மை அறியாமல் உன் அகஎண்ணமே மாறியது . அகத்தின் உண்மைசெயலை உணர்ந்து வாழ்.
8...என்னிடம் கேட்கிறான் உண்மைஅறிந்து நீ வாழ்கிறாயா ? உன் உடல் அகம் அறியும் எம்மை.எம் வாசி உணர்த்தும் உண்மையை உன் அகத்தில் , உணர நீ தயாரா?
9...நீ காணும் கண்ணில் உண்மையில்லை. கண்ணுக்கு உண்மை ஒளியை கொடு வாசியால், உன்னை உனக்குள்ளே , அகத்தில் உண்மையாய் உணர்த்தும். அதுவே உண்மை மனித ஆற்றல்.
நீ காணும் காட்சியை உணர்த்தும்,
உன் கண் உண்மையில்லை.
10...உண்மை அகத்தில் தான் உண்டு . பொய் வெளியில் தான் உண்டு .
நான் கற்று தரும் உண்மை வாசி அதுபோதும் எனக்கு .
என்றும் இயற்கை என்னுள் செயலாகும் உண்மை
அதுபோதும் எனக்கு .
மற்றவர்களுக்கு உண்மை பேரறிவை உணர்த்தும் நல்ல எண்ணம் என்னிடம் உண்டு.அதுபோதும் எனக்கு .
அதுவே என் இயற்கை எனக்கு கொடுத்த உண்மை மூலதனம் .
11...உன் அகத்தில் ஒரே ஒரு அகம் உண்டு .உண்மை எண்ணும் எண்ண அகசெயல் ஒன்று உண்டு. அதை செயல்படுத்த ஒரேயொரு வழி வாசியோகமே.
இரவும் பகலும் இரண்டல்ல , இன்பம் துன்பம் இரண்டல்ல,
உன் அக எண்ண இருளை நீக்கு. இரண்டும் ஒன்றே .
உணர்த்துவது எம் வாசியோகமே .
12...தினம் வாசியோகம் செய் .
உண்மை அறிவை உணர்வாய் .
உன்னை விட்டு, வாசி செல்வதில்லை .
கோவிலில் கை விளக்கு ஏற்றுவது முக்கியமில்லை.
உன் அகத்தில் எம் வாசியால் விளக்கொளி ஏற்றிப்பார் .
உண்மையான அன்பு எதுவென்று தெரியும் .
அது போதும் எனக்கு . -

0 comments:

Post a Comment