#சிவசித்தன்

சிவகுரு சிவசித்தரின் கூற்றுப்படி நமது உடல் என்பது ஒரு கண்ணாடியைப் போன்றது. எப்படி என்றால், கண்ணாடியை எப்படி சூரிய ஒளி முன் வைத்தால் அது அந்த சூரியக் கதிர்களை உள்வாங்கிக் கொண்டு, அந்த வெளிச்சத்தை பிரகாசமாக வெளியில் ஒளிவிடும். அதுபோல, நம் உடலில் சூரியனின் வெப்பம் போல நாம் வாசியோகம் பயில கழிவகற்றி வாசியை உள் ஏற்றினால் நம் உடலில் உள்ள உள் ஒளியினை, உள் அகமனை உண்மையில் நீ காணலாம். கண்ணாடியில் தூசி படிந்தால் அதன் பிரகாசம் குறைந்துவிடுவது போல உன் உடலில் கழிவுகள் தேங்கினால் உன் உடலின், உள்ளத்தின் உண்மையை உன்னால் உணர முடியாது. கண்ணாடியின் தூசியைத் துடைப்பதுபோல் உன் உடலில் உள்ள கழிவுகளை அகற்றவே எமது சிவகுரு சிவசித்தர் அருளும் வாசியோகம் உன்னுள் செயல்படுகின்றது. உணர்வாய் உண்மைதனை உணர்த்துவார் சிவசித்தர் வாசியால்.. தானாய்.....
https://www.facebook.com/ngobikannan
https://www.facebook.com/ngobikannan
0 comments:
Post a Comment