Saturday, 30 August 2014

சிவசித்தனேமுதலும்முடிவும்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தெளிந்த நல் வாசி நீர் ---------- 3
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

#சிவசித்தன் கூற்று....

தூய்மையே இல்லாமல் இருக்கும் ஐம்பூதங்களும் நம்முள் செயலாகும் போது அங்கு நம் உடலில் கட்டாயம் கழிவின் பாதிப்பு மருத்துவ உலகின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கும்...மனிதர்கள் தங்கள் உடலின் உண்மை அறியாமல் தண்ணீரை என்னதான் 
கொதிக்க வைத்து அருந்தினாலும் இன்றுள்ள கிருமிகள் கொதிநிலை தாண்டி உயிர் பெரும் அளவிற்கு மனிதனின் உடல் மோசமாக உள்ளது...விளைவு மரணம் நோக்கி இழுக்கப்படும் உயிர்கள்...ஒரே தீர்வு #சிவசித்தன்வாசியே..எவ்வாறு

https://www.facebook.com/ngnskumaring

Thursday, 28 August 2014

சிவசித்தனேமுதலும்முடிவும்

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்.
****** ****** ******
மதுரை சிந்தாமணி சிவகுரு சிவசித்தரின் வாசியோகம் பயிலும் அனைவருக்கும், சூட்சுமம் உணர்த்தும் உன்னதம் உணர்ந்தவர்களே. அவ்வகையில், இன்று ஒரு தகவல்.
----------------- ----------------------------
இந்த மையத்திற்கு “சிவகுரு சிவசித்தரின் ஒளி திருத்தலம் ”என்று கூறி வருகிறோம். இதுபோன்ற எமது மையத்தின் தகவல்களை இணையத்தின் வாயிலாக உற்று நோக்கும் தமிழ் கூறும் நல் உலகினரின் பார்வையில்,எம் செயல் மிகைபடுத்தி கூறுவது போல தோன்றும். ஆனால் உண்மை நிலை தனை நீவிரும் வாசியோகம் செய்யும்போது உணர்வீர்கள்.
மானுட உலகினரே நீங்கள் அறியாத, இதுவரை யாரும் உணர்த்தாத இறை உணர்வின் உன்னதம் உணர்த்துகிறேன் வாருங்கள் என கல்லூரி மாணவனைப் போல காட்சிதரும் இவரின் அறைகூவலுக்கு எவரும் செவிசாய்க்கவில்லை. எனவேதான் மானுடப்பிறவியின் ‘அற்பகுணம்’ உணர்ந்த சிவசித்தர் [ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்கணும் அல்லவா?]உன் உடல்பிணிதனை மருந்தின்றி தீர்க்கிறேன் என்று அழைப்புவிடுத்து செயல் படுத்தி வருகிறார்.
அதாவது, உலகில் வேறு எந்த மையமும் வலியுருத்தாத மருந்தில்லா பெருவாழ்வு வாழ வழிகாட்டும் இடம் இதுவாகும்.
இப்படி வாசியை நோக்கி வந்த மானுடனின் ‘நாடி’ பிடித்துப்பார்த்து ,அவனின் தளர்ந்த நாடியின் செயலை உசுப்பேற்றிடும் பயிற்சிகளை வழங்குகிறார். இதனால் ,உடல் கழிவு படிப்படியாக வெளியேறிய மானுடனின் முகம்[தேஜஸ்]பொலிவு பெற்று ஒளிவீசுகிறது .இங்ஙனம் அகஇருள் நீங்கி பயிற்சியாளர்கள் அனைவரும் உள்ஒளி உணர்கிறோம்.

இதன் அடுத்தக்கட்ட செயலான பிரபஞ்ச பரவெளியின் நெருப்பாற்றல் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு அறிவுஜோதியின் ஆற்றலினால் பாடல்புனைதலும்,கட்டுரைகள் வடிப்பதும் என அகுணர்வின் செயல் மிளிர்கிறது.
அடுத்த பரிமாணமாக ,பிறரின் பரிதவிப்பினை உணர்ந்து அவர்களின்பால் பரிவுகொண்டு அவர்களின் மேன்மைக்கு உதவுதல் என்னும் அது உன்னத நிலைக்கு அழைத்து செல்கிறது. இத்தகைய செயலை செய்திடும் வாசி கலை வழங்கும் சிவசித்தரை ‘ஒளி உணர்த்தும் பரம்பொருள் ‘ என்கிறோம்.இதனினும் சூட்சும செயலை தியானத்தின் மூலம் உணர்த்திவரும் செயல் உணர்ந்தவர்களின் பிறவிப்பயன் பெற்ற ஆத்மவிசுவாசமே ‘சிவகுரு சிவசித்த பேரொளியான் ‘என்று கூறுவதில் இறும்பூது அடைகிறோம்.

ஒருசிலர் இதுபோன்ற உன்னதம் என்ற ஆத்மஜோதி தனை வேறு வகையில் உணர்ந்தவர்கள் (?)எங்களை அமைதியாக கவனித்து வருகின்றனர். ஆனால் சில இரண்டும் கெட்டான்களான சில அரைகுறைகள் போடும் கூப்பாடுகள் – குறைகுடம் கூத்தாடும் – என்பதை மெய்ப்பிப்பதால் இதனை பொருட்படுத்துவது இல்லை இதுபோன்ற சலசலப்புக்கள் ‘தானாக’ அடங்கிவிடும் தன்மை கொண்டவை அல்லவா. எனவே, இவற்றை புறந்தள்ளி இதனினும் உயர்ந்த நிலை நோக்கி சிவசித்தருடன் இனைந்து பயணிப்போம். பராவ்ளியில் ஒன்றுடன் ஒன்றாக சங்கமிப்போம்
- சர்வம் சிவகுரு சிவசித்தருக்கே சமர்ப்பணம். .

சிவசித்தன்


சிவகுரு சிவசித்தர் ஆசையால்,

#
சிவசித்தன்வாசியோகம்

பொய்யாடா இந்த சொந்தம் பந்தம் !
மெய்யடா உன் உடல்,
உடல் தரித்த உன் உயிர்!
உள்ளே அகமனன் அற்புதமாய்
அழகாய் ஆனந்தமாய்
ஆடிக் கொண்டிருக்கின்றான்
வாசிக்காற்று உள் சென்றவுடன்.!

கிட்டாத பேரானந்தம் இனி ஒரு
பிறவி இருப்பின் வாசியின்
மாணவனாய் எம் சிவசித்தரின்
உண்மை பக்தனாய் இருக்கவே விரும்புகின்றேன். !

ஆன்மாவே என் எண்ணத்தை
உள் மனதில் ஆழமாய் வைத்துவிட்டேன்
ஈடேற எம் சிவசித்தரின்
அருள் வேண்டி காத்திருக்கின்றேன்
கிட்டுமா இந்த பரமானந்த நிலை?



சிவசித்தன்

#சிவசித்தன்

சிவகுரு சிவசித்தரின் கூற்றுப்படி நமது உடல் என்பது ஒரு கண்ணாடியைப் போன்றது. எப்படி என்றால், கண்ணாடியை எப்படி சூரிய ஒளி முன் வைத்தால் அது அந்த சூரியக் கதிர்களை உள்வாங்கிக் கொண்டு, அந்த வெளிச்சத்தை பிரகாசமாக வெளியில் ஒளிவிடும். அதுபோல, நம் உடலில் சூரியனின் வெப்பம் போல நாம் வாசியோகம் பயில கழிவகற்றி வாசியை உள் ஏற்றினால் நம் உடலில் உள்ள உள் ஒளியினை, உள் அகமனை உண்மையில் நீ காணலாம். கண்ணாடியில் தூசி படிந்தால் அதன் பிரகாசம் குறைந்துவிடுவது போல உன் உடலில் கழிவுகள் தேங்கினால் உன் உடலின், உள்ளத்தின் உண்மையை உன்னால் உணர முடியாது. கண்ணாடியின் தூசியைத் துடைப்பதுபோல் உன் உடலில் உள்ள கழிவுகளை அகற்றவே எமது சிவகுரு சிவசித்தர் அருளும் வாசியோகம் உன்னுள் செயல்படுகின்றது. உணர்வாய் உண்மைதனை உணர்த்துவார் சிவசித்தர் வாசியால்.. தானாய்.....

https://www.facebook.com/ngobikannan

Wednesday, 27 August 2014

Sivasithan

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்.
***** ***** ***** *****
மதுரை சிந்தாமணி சிவகுரு சிவசித்தரின் வாசியோகம் பயிலும் அனைவருக்கும், சூட்சுமம் உணர்த்தும் உன்னதம் உணர்ந்தவர்களே. அவ்வகையில், இன்று ஒரு தகவல்.
____________ ___________ 
இந்த பூமியில் வாழ்ந்த நம் முன்னோர்கள் படைத்ததே கடவுள்களின் உருவ வடிவம், நாம் இறையுணர்வை இதுபோன்ற மானுட உருவில் கண்டிட இயலாத ஒன்றே. ஆனால் இத்தகைய இறை வடிவங்களுக்கு பல எண்ணிக்கையில் மனைவிகள் உள்ளதாக சித்தரிக்க பட்டுள்ளது. அதுபோலவே,முனிவர்களுக்கும் ரிஷி பத்தினிகள் எண்ணிக்கையில் பல உள்ளதாக அறிகிறோம். இதுபோன்ற கருத்துகள் ஏற்புடையது அல்ல.
__________ _____________

அப்படியானால், இதுபோன்ற பெண் உருவங்கள் சித்தரிக்கப்பட்டதன் காரணம், ஒருமானுடனின் செயல் ஆற்றல் அளவினை சக்தியின் வெளிப்பாடு என்கிறோம்.இந்த சக்தி என்பதை பெண் என்று பின்னர் வந்தவர்கள் கருதிவிட்டனர். இதுபோன்ற அரிதான செயல்களை செய்தவர்களின் ஆற்றலினை குறிப்பிடும் அடையாளமே ,பிற்காலத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உருவகம் கொடுத்துவிட்டனர். அதாவது, மகாவிஷ்ணுவிற்கு பத்தாயிரம் மனைவிகள் என்று ஒரு பதிவு உள்ளது. இது உண்மையில் மனைவிகள் அல்ல. பத்தாயிரம் நபர்களின் ஆற்றல் அவர் ஒருவரிடமே குவிந்து உள்ள சர்வ வல்லமை படைத்தவர்,என்பதே அது.
இந்தவகையில் சேர்ந்ததே அகத்தியருக்கு பதினெட்டு மனைவிகள் என்பதும்.
______ _______ ________
எனவே, இன்றுமுதல் வாசியின் வழியில் நின்று நல் சிந்தனை கொள்வோம்.


Monday, 25 August 2014

Sivasithan

#Sivasithan

#நான் என் உடலில் வாசி என்னும் நல் விதையை பயிரிட்டேன் .

#நல்விதை என்றாலும் அதிலும் களைகள் இடை இடையே வளர்ந்தது அதையும் வாசியில் என் எண்ணத்தை வைத்தேன்.

#வாசியே நெருப்பாய் மாறி உடலில் அழிக்க ஆரம்பித்தது .
களையை அழித்து நன்றாக விளைந்தவற்றை நானே என்னுள் சேமிக்காமல் மற்றவனுக்கு எடுத்து கொடுக்க ஆரம்பித்தேன் .

மற்றவனுக்கு எடுத்து கொடுத்த போது எதுவும் என் எண்ணத்தில் தோன்றவில்லை .அதே நிலையில் தானாய் விளைய ஆரம்பித்தது .

#எடுத்து கொடுக்க ஆரம்பித்து கொண்டே இருக்கிறேன் .----- சிவசித்தன்


https://www.facebook.com/ngobikannan

Saturday, 23 August 2014

Sivasithan

#Sivasithan
மனிதனே
"பிராணனை கண் உயிர் என்போம் "
************************************************
மனிதனே 

காணாத அகத்தை காண காலாலே கனல்வீசி
உடல் கழிவு தானாய் காணாமல் போக - அதனுடனே 
நீணனும் போகுமே உன்னுள்ளே நானே நானாய் இருப்பேனே
https://www.facebook.com/ngobikannan

சிவசித்தனேமுதலும்முடிவும்

#சிவசித்தனேமுதலும்முடிவும்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
#சுளிமுனை

உண்மை பிரகாசம் உடலால் உணர்ந்து சூரிய சந்திர கலையை ஒன்று சேர்க்கும் நிலை மிக மிக முக்கியம் ---------------#சிவசித்தன்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சிவகுரு சிவசித்தன் வாசியில் உடலானது குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பொன் போல மின்னத்துவங்கும்...உடலில் சிவசித்த பிரகாசம் வெளித் தெரியும்...இந்நிலையில் சுவாசத்தில் இரு வழியும் தடங்கலின்றி தூய்மையாக வாசிக்கு வழிகாட்ட இருவழியும் ஒன்றில் இணையும் தன்மை வாசியில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்..யாரும் கூறுவது போல இவை எளிதானக் காரியங்கள் அல்ல..வலிகளும் உணர்வுகளும்...கழிவகற்றலும் சிவசித்த நெறியும் தீர்மானிக்கும் உண்மைகள் இவை...சந்திர சூரிய கலையினை பாகம் பிரித்த வல்லுனர்கள் கவனத்திற்கு.................................................இடமும் வலமும் எக்கணமும் ஒன்றாய் செயலாகாது ,உண்மை இயற்கை...மாற்றமே இயற்கை..செயல்பாடே உண்மை..வாசியில் மாற்றங்கள் உணர்கிறோம்...நீ கற்ற,எழுதிய அனைத்தும் பொய்யானது வாசியால்...



https://www.facebook.com/ngnskumaring

Friday, 22 August 2014

Sivasithan

#Sivasithan
மனிதனே!

#பெற்றோர் வீட்டில் அனைத்து நலங்களுமிருக்கத் கணவனுடன் கூடிவாழ்தலால் உடல் நலம்பெற்று, உள்ளம் மகிழ்ந்து, சுவையான உணவு உண்டு, மனைவியானவள் தன் கணவனே கண்கண்ட தெய்வம், என்று எண்ணி வாழ்வாள் .

#கணவன் வாழும் சிறிய இல்லமே பேரின்பப் பெருவாழ்வு தந்த இல்லமாம் என்று எண்ணுவாள் . கணவன் கையைப் பற்றி கொண்டு மகிழ்ச்சியோடு இன்புறுவதே சிறந்த வாழ்வாகும் .
https://www.facebook.com/ngobikannan

Thursday, 21 August 2014

சிவசித்தனேமுதலும்முடிவும்

#சிவசித்தனேமுதலும்முடிவும்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
உடலில் சுளிமுனை இயக்கத்தின் உணர்வை உணர்த்த , நீ வாசியோக பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும் .உடலின் "உண்மை உத்தமன் சுளிமுனை"யின் உச்சகட்டமாக "பேரொளி பிரகாசத்தை தருவதே" உண்மை வாசியோகமாகும் -------------------- #சிவசித்தன்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உண்மையான சுளிமுனை ஆற்றல் என்பது இயற்கையாய் இரு நாசியின் சுவாசமும் சீராகி ,உடலில் சுவாசமானது தானாய் செயல்பட்டு கழிவுகளை வெளித்தள்ளும் நிலைக்கு வருகையில் இரண்டும் ஒன்றாய் குருதியோடு வாசியால் கலந்து மேலெழும்பும் நிலையாகும்..இந்நிலை #சிவசித்தன் தவிர யாராலும் உணர்த்த முடியாது...சுளிமுனை இயக்கம் எங்கு உணரப்படுகிறது என்பதும் சிவசித்தன் உணர்த்தும் சூட்சுமமே..எப்போதெல்லாம் உணரலாம் என்பதும் சிவசித்தன் இயற்கையினை எங்களுள் நிர்ணயித்த உண்மையாகும்...பேரொளி பற்றி நாளை பேசுவோம்...
 — at Shree Vilvam Yoga Centre.

https://www.facebook.com/ngnskumaring

சிவசித்தன் வாசியோக உடல் ஆன்மா விளக்கம்

#Sivasithan
மனிதனே
"பிராணனை கண் உயிர் என்போம் "
************************************************
ஐம்பூதம் ஐம்பொறியும் ஐம்புலனும் உனதில்லை 

இவையால் தன்னை அறிந்து தனை உணர்ந்து உடலில் உணர்வாய்

உயிராய் உணர்வதே " ஆன்மாவை " தான் .
****************
தன்னையே அறிந்து தனை உணர்வது வாசியாலே......

https://www.facebook.com/ngobikannan

சிவசித்தன் வாசியோகப்பாடல்


Sivasithan
#Sivasithan
மனிதனே
"பிராணனை கண் உயிர் என்போம் "
************************************************
மனிதனே 

வாசியாலே இருவழி தானாய் அடைத்து 
இன்பத் தாலேசிவ குருவிதிமுறை கண்டு 
இருளை அகத்தே அழித்து பேரறிவாலே 
திருவருளை பெற்று பேரொளியானைக் காண் .------- சிவசித்தன்


https://www.facebook.com/ngobikannan